மும்பை: கிரெடிட் கார்டு உள்ளிட்ட உடனடி கடன் சேவைகள், இளம் தலைமுறையின் சேமிப்புத் திறனை குறைத்துள்ளதாக ஆர்.பி.ஐ துணை ஆளுநர் கருத்து தெரிவித்துள்ளார். புதிய நிதியியல் தொழில்நுட்பங்கள், பாரம்பரிய பொருளாதாரக் கொள்கைகளின் செயல்திறனை பாதிப்பதாகவும் அவர் விமர்சனம் செய்துள்ளார்.