பாவ்நகரில் இருந்து மஹுவா நோக்கி பேருந்து சென்று கொண்டிருந்த போது, காலை 6 மணியளவில் த்ரபஜ் கிராமத்திற்கு அருகே விபத்து ஏற்பட்டதாக காவல்துறை தரப்பில் தகவல் தெரிவித்தனர். இந்த விபத்தில், 6 பேர் இறந்தனர் மற்றும் 8 முதல் 10 பேர் காயமடைந்தனர். காயமடைந்தவர்கள் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதால் அபாய கட்டத்தை தாண்டிவிட்டனர்.
தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் மற்றும் ஆம்புலன்ஸ் வாகனங்களில் காயமடைந்தவர்களுக்கு உடனடியாக மருத்துவ சிகிச்சை அளித்தனர். இந்த விபத்தில் தனியார் பேருந்தின் இடது பக்கம் முற்றிலும் நொறுங்கியது.
The post குஜராத் மாநிலம் பாவ்நகர் மாவட்டத்தில் நடந்த சாலை விபத்தில் 6 பேர் உயிரிழப்பு appeared first on Dinakaran.