எதிர்க்கட்சிகளின் கடும் எதிர்ப்பையும் மீறி ஒரே நாடு ஒரே தேர்தல் மசோதா மக்களவையில் தாக்கல்..!!

டெல்லி: எதிர்க்கட்சிகளின் கடும் எதிர்ப்பையும் மீறி ஒரே நாடு ஒரே தேர்தல் மசோதா மக்களவையில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. மக்களவையில் ஒன்றிய அமைச்சர் அர்ஜுன்ராம் மேக்வால் மசோதாவை தாக்கல் செய்தார். மசோதாவுக்கு அறிமுக நிலையிலயே எதிர்ப்பதாக காங்கிரஸ் உறுப்பினர் மணீஷ் திவாரி எதிர்ப்பு தெரிவித்தார். ஒரே நாடு ஒரே தேர்தல் முறை என்பது நமது நாட்டின் ஜனநாயகத்தையே அழித்துவிடும். நாட்டின் அரசியலமைப்பின் அடிப்படை மீது தாக்குதல் நடத்துவதாகவும் அவர் குற்றச்சாட்டு வைத்தார்.

The post எதிர்க்கட்சிகளின் கடும் எதிர்ப்பையும் மீறி ஒரே நாடு ஒரே தேர்தல் மசோதா மக்களவையில் தாக்கல்..!! appeared first on Dinakaran.

Related Stories: