மொபட் மீது பள்ளி பஸ் மோதி தாய் கண்முன் அண்ணன், தங்கை பலி

நெய்வேலி: கடலூர் மாவட்டம் நெய்வேலி வடக்குத்து ஊராட்சி காந்திநகர் அண்ணா கிராமத்தை சேர்ந்தவர் ஜான் சின்னப்பராஜ். இவரது மனைவி சிலம்பரசி(35). இவர்களுக்கு டேவிட்ராஜ்(13), கிறிஸ்தவராஜ், ஜாஸ்விகா(6) ஆகிய 3 குழந்தைகள் உள்ளனர். நேற்று காலை சிலம்பரசி 3 குழந்தைகளுடன் மொபட்டில் நெய்வேலி டவுன்சிப்பில் உள்ள பள்ளிக்கு சென்று கொண்டிருந்தார்.

மகன் கிறிஸ்தவராஜை என்எல்சி நடுநிலை பள்ளியில் இறக்கிவிட்டு, டேவிட்ராஜ் மற்றும் ஜாஸ்விகாவுடன் நெய்வேலி வட்டம் 10 ஆலமரம் பஸ் ஸ்டாப் வழியாக சென்றபோது, எதிரே வந்த தனியார் பள்ளி பஸ், மொபட் மீது மோதியது. இதில், ஜாஸ்விகா, டேவிட்ராஜ் இறந்தனர். சிலம்பரசிக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

The post மொபட் மீது பள்ளி பஸ் மோதி தாய் கண்முன் அண்ணன், தங்கை பலி appeared first on Dinakaran.

Related Stories: