பாஜ தலைவர் அண்ணாமலையுடன் நடிகை கஸ்தூரி திடீர் சந்திப்பு: முக்கியமான விஷயம்பற்றி விவாதித்ததாக பேட்டி

சென்னை: தி.நகர் பாஜ தலைமை அலுவலகத்தில் மாநில தலைவர் அண்ணாமலையை, நடிகை கஸ்தூரி நேற்று திடீரென சந்தித்து பேசினார். பின்னர் அவர் அளித்த பேட்டி: எனக்கு கடந்த நவம்பர் மாதம் நடந்த சர்ச்சையில், கைது பிரச்னையின் போது பாஜ தலைவர் அண்ணாமலை லண்டனில் இருந்தார். அப்போது அவரை நான் தொடர்பு கொண்டு பேசினேன். அவர் எனக்கு நிறைய தைரியம் கொடுத்தார். அட்வைஸ் கொடுத்தார். அவர் சொன்னதில் நான் பாதி தான் பண்ணுனேன். மீதி பண்றதுக்கு உள்ள என்னை உள்ளே போட்டு விட்டார்கள்.

லண்டனில் இருந்து திரும்பி வந்ததும், அண்ணாமலையை வரவேற்கும் விதமாகவும், எனக்கு நடந்த சோதனையான காலக்கட்டத்தில் பக்கப்பலமாக இருந்ததற்காக நன்றி தெரிவிப்பதற்காகவும் தான் இங்கே வந்தேன். வந்த இடத்தில் இருவரும் முக்கியமான விஷயத்தை நாங்கள் கண்டிப்பாக விவாதித்தோம். அந்த விவாதம் இன்னும் முற்றுப்பெறவில்லை. அதற்கான தொடர்ச்சி, மீட்சி இருக்கிறது. முழுமையாக விவாதித்து முடித்ததற்கு அப்புறம் கண்டிப்பாக உங்களுக்கு தெரிவிப்பேன்.

எல்லாரும் ஒருமித்த கூட்டணியாக இருந்து தேர்தலை சந்திக்க வேண்டும். என்னை பொறுத்தவரைக்கும் அது ஒரு நல்ல முன் ஏற்பாடாக இருக்கும். கடந்த ஒரு மாதமாக நான் சந்தித்து கொண்டு இருக்கும் வேறுபாடுகள், என் வாழ்க்கை ஒரு மாதத்தில் மாறி போய் விட்டது. அந்த மாற்றத்தை பற்றி தான் நான் அண்ணாமலையிடம் பேசினேன். கொஞ்சம் அரசியலும் பேசியிருக்கிறோம். மொத்த அரசியலும் பேசியதற்கு அப்புறம் உங்களிடம் தெரிவிப்பேன்.

The post பாஜ தலைவர் அண்ணாமலையுடன் நடிகை கஸ்தூரி திடீர் சந்திப்பு: முக்கியமான விஷயம்பற்றி விவாதித்ததாக பேட்டி appeared first on Dinakaran.

Related Stories: