வீடுகளுக்கு மின்சாரம் வழங்குவதில் இந்தியாவிலேயே மிக குறைந்த கட்டணம் வசூலிக்கப்படுவது தமிழகத்தில்தான் : அரசு விளக்கம்

சென்னை: இந்தியாவிலேயே வீடுகளுக்கு மிகக் குறைந்த மின்சார கட்டணம் தமிழகத்தில்தான் வசூலிக்கப்படுகிறது என்று தமிழக அரசு கூறியுள்ளது. இதுதொடர்பாக தமிழக அரசு நேற்று வெளியிட்டுள்ள அறிக்கை: கடந்த ஆண்டு மார்ச் மாத கட்டண விகிதங்களின்படி 100 யூனிட் மின்சாரத்திற்கு அனைத்து வரிகள் உட்பட மும்பையில் ரூ.643, ராஜஸ்தானில் ரூ.833, மத்திய பிரதேசத்தில் ரூ.618, உத்தரப் பிரதேசத்தில் ரூ.693, பீகாரில் ரூ.689, மராட்டியத்தில் ரூ.668, தமிழ்நாட்டில் ரூ.113 மட்டுமே வசூலிக்கப்படுகிறது.

வீடுகளுக்கு வழங்கப்படும் மின்சாரக் கட்டணம் இந்திய அளவில் ஒப்பிடும் போது, தமிழ்நாட்டில்தான் மிக மிகக் குறைவாக உள்ளது. மின்சாரக் கட்டணங்கள் மற்றும் வரி குறித்த சராசரி குறித்து 2023 மார்ச் நிலையில் புள்ளி விவரம் தொகுக்கப்பட்டு அரவிந்த் வாரியரால் வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி இந்திய மாநிலங்கள் ஒவ்வொன்றிலும் வீடுகளுக்கு வழங்கப்படும் மின்கட்டணங்களை ஒப்பிட்டுப் பார்த்தால் தமிழ்நாட்டில்தான் வீட்டு உபயோக மின்கட்டணம் வேறு எந்த ஒரு மாநிலத்தையும் விட மிக மிகக் குறைவாக உள்ளது என்ற உண்மை வெளிப்பட்டுள்ளது.

தமிழ்நாட்டில் உள்ள அனைத்து வீடுகளுக்கும் 100 யூனிட் மின்சாரம் இலவசமாகும். வீடுகளில் 100 யூனிட்டுக்கு மேல் பயன்படுத்தக்கூடிய மின்சாரத்திற்கு சராசரியாக கணக்கிடும்போது கட்டணம் ரூ.113ஆகும். இந்த சராசரி கட்டணத்தோடு ஒப்பிடும்போது மும்பை 100 யூனிட்டுக்கு ரூ.643 கட்டணம் வசூலிக்கப்படுகிறது. மும்பையில் ஒரு விசித்திரம் என்னவென்றால், அதானி ஒப்பந்தத்தின் மூலம் அளிக்கப்படும் மின்சாரக் கட்டணம் ரூ.643, டாடா நிருவாகத்தின் மூலம் அளிக்கப்படும் மின்சாரக் ரூ.524, மும்பை பிரிகான் எலக்ட்ரிசிடி மூலம் அளிக்கப்படும் மின்சாரக் கட்டணம் ரூ.488.

ராஜஸ்தான் மாநிலத்தில் அளிக்கப்படும் மின்சாரக் கட்டணம் ரூ.833, மராட்டிய மாநிலத்தில் அளிக்கப்படும் மின்சாரக் கட்டணம் ரூ.668, உத்தரப் பிரதேசத்தில் அளிக்கப்படும் மின்சாரக் கட்டணம் ரூ.693, பீகாரில் மாநிலத்தில் அளிக்கப்படும் மின்சாரக் கட்டணம் ரூ.684, மேற்கு வங்க மாநிலத்தில் அளிக்கப்படும் மின்சாரக் கட்டணம் ரூ.654, கர்நாடக மாநிலத்தில் அளிக்கப்படும் மின்சாரக் கட்டணம் ரூ.631, மத்திய பிரதேசத்தில் அளிக்கப்படும் மின்சாரக் கட்டணம் ரூ.643, ஒடிசா மாநிலத்தில் அளிக்கப்படும் மின்சாரக் கட்டணம் ரூ.426, சத்தீஸ்கர் மாநிலத்தில் அளிக்கப்படும் மின்சாரக் கட்டணம் ரூ.431.

இப்படி, இந்திய மாநிலங்கள் ஒவ்வொன்றும் வீடுகளுக்கு வழங்கப்படும் மின்கட்டணத்தை உயர்த்தி வழங்கும்போது தமிழ்நாட்டில்தான் மிக மிகக் குறைவாக ரூ.113 வசூலிக்கப்படுகிறது. இதனை திமுகவோ, தமிழ்நாடு அரசோ குறிப்பிட்டு சொல்லவில்லை. இந்திய மாநிலங்களில் நிலவும் மின்சார கட்டணங்களை ஒப்பிட்டு ஆய்வு செய்து அரவிந்த்வாரியர் குறிப்பிட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

The post வீடுகளுக்கு மின்சாரம் வழங்குவதில் இந்தியாவிலேயே மிக குறைந்த கட்டணம் வசூலிக்கப்படுவது தமிழகத்தில்தான் : அரசு விளக்கம் appeared first on Dinakaran.

Related Stories: