2 ஆண்டுகளில் ரூ.2.33 லட்சம் கோடி வாராக்கடன் தள்ளுபடி: நாடாளுமன்றத்தில் ஒன்றிய நிதித்துறை இணை அமைச்சர் தகவல்

டெல்லி : 2022-2023 மற்றும் 2023-2024 ஆகிய நிதியாண்டுகளில் மட்டும் பொதுத் துறை வங்கிகள் ரூ.2.33 லட்சம் கோடி வாராக்கடன்களை தள்ளுபடி செய்துள்ளது தெரியவந்துள்ளது. பொதுத்துறை வங்கி கடன் தள்ளுபடி தொடர்பான கேள்விக்கு மக்களவையில் ஒன்றிய நிதித்துறை இணை அமைச்சர் பங்கஜ் சவுத்ரி, எழுத்துப்பூர்வமாக பதில் அளித்துள்ளார். அதில் 2022-2023ம் நிதியாண்டில் பொதுத் துறை வங்கிகள் ரூ.1,18,949 கோடியை வாராகடனாக தள்ளுபடி செய்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 2023-2024ம் நிதியாண்டில் ரூ.1,14,622 கோடி வாராக்கடனாக தள்ளுபடி செய்யப்பட்டது. 2023-2024ம் நிதியாண்டில் மட்டும் அதிகபட்சமாக பஞ்சாப் நேஷனல் வங்கி ரூ.18,317 கோடியை வாராக்கடனாக தள்ளுபடி செய்துள்ளது.

இருப்பினும் கடன் தொகையை வசூலிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

The post 2 ஆண்டுகளில் ரூ.2.33 லட்சம் கோடி வாராக்கடன் தள்ளுபடி: நாடாளுமன்றத்தில் ஒன்றிய நிதித்துறை இணை அமைச்சர் தகவல் appeared first on Dinakaran.

Related Stories: