மகாராஷ்டிராவைச் சேர்ந்த ஜாகிர் உசேன், 1951 இல் புகழ்பெற்ற தபேலா இசை மேதை உஸ்தாத் அல்லா ரக்கா கானின் மகன் ஆவார். தந்தையைப் போல் ஜாகிர் உசேன் சிறுவயது முதல் இசை நிகழ்ச்சிகளை நடத்தி வந்தார். ‘தால்’ உட்பட ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைப்பிலும் ஜாகிர் உசேன் தனது பங்களிப்பைச் செய்துள்ளார்.
அமெரிக்காவின் சான் பிரான்சிஸ்கோவில் குடும்பத்துடன் வசித்து வந்த ஜாகிர் உசேன் இருதய நோய் பிரச்சினை காரணமாக கடந்த வாரம் ஐசியு-வில் அனுமதிக்கப்பட்டார். இதையடுத்து அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததாக தகவல் பரவியது.
ஜாகிர் உசேன் உயிரிழக்கவில்லை எனவும் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருவதாகவும் அவரது குடும்பத்தினர் தரப்பில் தகவல் தெரிவிக்கப்பட்டது. ஜாகிர் உசேன் உடல் நலன் குறித்து யாரும் தவறான தகவல்களைப் பரப்ப வேண்டாம் எனவும் அவரது குடும்பத்தினர் கோரிக்கை விடுக்கப்பட்டது. இந்த நிலையில் தற்போது அவர் உயிர் பிரிந்ததாக அறிவிக்கப்பட்டுள்ளது.
அவரது மறைவு ரசிகர்களை சோகத்தில் ஆழ்ந்துள்ளனர். ரசிகர்கள் மட்டுமின்றி பல்வேறு தரப்பினர் ஜாகிர் உசேன் மறைவிற்கு இரங்கல் தெரிவித்து வருகின்றனர். இசை சேவைக்காக ஜாகிர் உசேனுக்கு பத்ம ஸ்ரீ, பத்ம பூஷண், பத்ம விபூஷண் விருதுகள் வழங்கப்பட்டுள்ளன. அதேபோல், சர்வதேச அளவில் உயரிய விருதான கிராமி விருதை 4 முறை வென்றவர் ஜாகிர் உசேன். அவரின் மறைவு இசைப்பிரியர்களைச் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.
The post பிரபல தபேலா இசை மேதை ஜாகிர் உசேன் உடல்நலக்குறைவால் காலமானார் appeared first on Dinakaran.