வங்கக் கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாவதில் தாமதம்: இந்திய வானிலை ஆய்வு மையம்

டெல்லி: அந்தமான் கடலின் மத்திய பகுதிகளில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவி வருகிறது. இது 24 மணி நேரத்தில் குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதியாக வலுப்பெறும் என நேற்று முன்தினம் வானிலை மையம் தகவல் தெரிவித்திருந்தது.

இந்த குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி நாளை (டிச.17) தமிழ்நாட்டின் கடலோர பகுதிகளை நோக்கி நகரக்கூடும் என தெரிவிக்கப்பட்டது. இதனால் நாளை (டிச.17) தமிழகத்தில் 12 செ.மீ. முதல், 20 செ.மீ. வரையிலான மழைக்கு வாய்ப்பு உள்ளது என தகவல் தெரிவிக்கப்பட்டது. எனவே மிகக் கனமழைக்கான ஆரஞ்சு அலர்ட் விடுக்கப்படுக்கிறது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் வங்கக் கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது. நேற்றே காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாகும் என கணிக்கப்பட்ட நிலையில் இதுவரை உருவாகவில்லை. காலை 5.30 மணி நிலவரப்படி அடுத்த 24 மணி நேரத்தில்தான் காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாகும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.

The post வங்கக் கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாவதில் தாமதம்: இந்திய வானிலை ஆய்வு மையம் appeared first on Dinakaran.

Related Stories: