கேரளாவை பழிவாங்குகிறது ஒன்றிய அரசு: முதல்வர் பினராயி விஜயன் பேட்டி

திருவனந்தபுரம்: கேரளா முதல்வர் பினராயி விஜயன் காசர்கோட்டில் கூறியது: கடந்த சில மாதங்களுக்கு முன் வயநாட்டில் ஏற்பட்ட பயங்கர நிலச்சரிவில் 300க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். நூற்றுக்கணக்கானோர் காயமடைந்தனர். ஏராளமான வீடுகளும், விவசாய நிலங்களும் சேதமடைந்தன. இந்த நிலச்சரிவில் 2 கிராமங்கள் அடியோடு அழிந்தன. இத்தகைய பேரழிவு நடந்த போதிலும் ஒன்றிய அரசு கேரளாவை கண்டு கொள்ளவில்லை.

இதுவரை கேரளாவுக்கு எந்த நிவாரண நிதியும் ஒதுக்கவில்லை. ஒன்றிய அரசு கேரளாவிடம் பழிவாங்கும் போக்குடன் நடந்து கொள்கிறது. எந்த மாநிலத்திடமும் இவ்வாறு நடந்து கொள்ளக் கூடாது. கேரளாவும் இந்தியாவில் தான் உள்ளது என்பதை உணர வேண்டும். கேரளாவுக்கான நீதி மறுக்கப்படுகிறது. இத்தகைய செயலில் ஈடுபடும் ஒன்றிய அரசை எதிர்த்து மக்கள் ஒன்று திரள வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

The post கேரளாவை பழிவாங்குகிறது ஒன்றிய அரசு: முதல்வர் பினராயி விஜயன் பேட்டி appeared first on Dinakaran.

Related Stories: