புதுவையில் ஜனவரி முதல் ஹெல்மெட் கட்டாயம் மீறினால் ரூ.1000 அபராதம்

புதுச்சேரி: புதுச்சேரி மாநிலத்தில் 2017ல் டூவீலரில் ஹெல்மெட் அணிவது கட்டாயமாக்கப்பட்டது. பொதுமக்கள் மத்தியில் கடும் எதிர்ப்பு கிளம்பியதால் பின்னர் வாபஸ் பெறப்பட்டது. கடந்த 2022 நவம்பரில் மீண்டும் ஹெல்மெட் கட்டாயமாக்கப்பட்டது. ெஹல்மெட் இன்றி பயணித்தால் ரூ.1000 அபராதம், 3 மாதத்துக்கு ஓட்டுநர் உரிமம் ரத்து என அறிவிக்கப்பட்டது.

இதற்கு அரசியல் கட்சியினர் எதிர்ப்பு தெரிவித்ததால் போலீசார் அபராதம் விதிப்பதை நிறுத்திவிட்டனர். இந்நிலையில், வருகிற 2025 ஜனவரி 1 முதல் ஹெல்மெட் கட்டாயமாக்கபோலீசார் திட்டமிட்டுள்ளனர். மீறினால் ரூ.1000 அபராதம் விதிக்கவும் முடிவு செய்துள்ளனர்.

The post புதுவையில் ஜனவரி முதல் ஹெல்மெட் கட்டாயம் மீறினால் ரூ.1000 அபராதம் appeared first on Dinakaran.

Related Stories: