எதிர்க்கட்சி எம்பிக்களுக்கு எதிராக சர்ச்சை கருத்து ஒன்றிய அமைச்சர் ரிஜிஜூவுக்கு எதிராக உரிமை மீறல் தீர்மானம்: மாநிலங்களவையில் திரிணாமுல் காங்கிரஸ் கொண்டுவந்தது

புதுடெல்லி: எதிர்க்கட்சி எம்பிக்கள் குறித்து சர்ச்சைக்குரிய கருத்து கூறியதாக நாடாளுமன்ற விவகாரத்துறை அமைச்சர் கிரண் ரிஜிஜுவுக்கு எதிராக திரிணாமுல் எம்பி உரிமை மீறல் தீர்மானத்தை கொண்டு வந்துள்ளார். மாநிலங்களவையில் நேற்று முன்தினம் அவை தலைவர் மற்றும் குடியரசு துணை தலைவரான ஜெகதீக் தன்காருக்கு எதிராக எதிர்கட்சிகள் நம்பிக்கையில்லா தீர்மானத்தை கொண்டு வந்து நோட்டீஸ் அளித்தன. இது தொடர்பாக அவையில் விவாதம் நடந்து வருகின்றது. இந்நிலையில் நேற்று முன்தினம் அவையில் நாடாளுமன்ற விவகாரங்கள் துறை அமைச்சர் கிரண் ரிஜிஜு எதிர்க்கட்சி எம்பிக்களை பார்த்து, ‘‘நீங்கள் அனைவரும் இந்த அவையில் இருப்பதற்கு தகுதியற்றவர்கள்.” என்றார். கிரண் ரிஜிஜுவின் இந்த பேச்சு சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. எதிர்க்கட்சி எம்பிக்கள் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

இது குறித்து திரிணாமுல் காங்கிரஸ் எம்பியான சகரிகா கோஸ் ஒன்றிய அமைச்சர் கிரண் ரிஜிஜுவுக்கு எதிராக உரிமை மீறல் தீர்மானத்தை கொண்டு வந்துள்ளார். இந்த தீர்மானத்திற்கு ஆதரவாக எதிர்கட்சிகளை சேர்ந்த 60 எம்பிக்கள் கையெழுத்திட்டுள்ளனர். இது குறித்து திரிணாமுல் எம்பி சாகரிகா கோஷ் கூறுகையில்,‘‘ நாடாளுமன்றத்தை சுமுகமாக நடத்துவதற்கு பதிலாக எதிர்க்கட்சிகளை அவர் மீண்டும் மீண்டும் அவமதிக்கவேண்டும் என்பதை தேர்வு செய்துள்ளார். நாடாளுமன்றத்துக்கு உள்ளேயும், வெளியேயும் எதிர்க்கட்சி உறுப்பினர்களை அவமதித்துள்ளார்” என்றார்.

The post எதிர்க்கட்சி எம்பிக்களுக்கு எதிராக சர்ச்சை கருத்து ஒன்றிய அமைச்சர் ரிஜிஜூவுக்கு எதிராக உரிமை மீறல் தீர்மானம்: மாநிலங்களவையில் திரிணாமுல் காங்கிரஸ் கொண்டுவந்தது appeared first on Dinakaran.

Related Stories: