இந்நிலையில், சபாநாயகர் ஓம் பிர்லாவை சந்தித்துப் பேசிய மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி, தனக்கு எதிரான அவதூறான கருத்துக்களை நீக்குமாறும், அவை சுமூகமாக நடப்பதை உறுதிப்படுத்துமாறும் கோரிக்கை விடுத்தார். பின்னர், ஓம் பிர்லா உடனான சந்திப்புக்குப் பிறகு செய்தியாளர்களிடம் பேசிய ராகுல் காந்தி; நான் மக்களவைத் தலைவரைச் சந்தித்துப் பேசினேன். என் மீதான கீழ்த்தரமான கருத்துக்களை அவைக்குறிப்பில் இருந்து நீக்க வேண்டும் என்று கூறினேன். அதை பரிசீலிப்பதாக அவர் பதிலளித்தார்.
அவை நடவடிக்கைகள் செயல்பட வேண்டும், அவையில் விவாதம் நடக்க வேண்டும் என்பதே எங்கள் நோக்கம். என்னைப் பற்றி யார் என்ன சொன்னாலும் பரவாயில்லை. அவர்கள் எப்படி ஆத்திரமூட்டினாலும் நாங்கள் அவர்களை அனுமதிப்போம். அதேநேரத்தில், டிசம்பர் 13 அன்று அரசியலமைப்பு மீதான விவாதம் இருக்க வேண்டும் என்று நாங்கள் விரும்புகிறோம். இந்த விவாதத்தை அவர்கள் விரும்பவில்லை. அதனால்தான் மறுத்து வருகிறார்கள். ஆனால், நாங்கள் கடைசிவரை இதை விடமாட்டோம். இதற்காக அவர்கள் எங்கள் மீது தொடர்ந்து குற்றச்சாட்டுகளை சுமத்துவார்கள். எனினும் விவாதம் வேண்டும்’ என்று கூறினார்.
The post சபாநாயகர் ஓம் பிர்லாவை சந்தித்து பேசிய ராகுல் காந்தி.. பாஜக எம்.பி.க்கள் தனக்கு எதிராக பேசிய அவதூறு கருத்துகளை நீக்க கோரிக்கை!! appeared first on Dinakaran.