டெல்லி : எதிர்க்கட்சிகளின் தொடர் முழக்கத்தால் மாநிலங்களவை நாள் முழுவதும் ஒத்திவைக்கப்பட்டது. மாநிலங்களவை தலைவர் ஜெகதீப் தன்கர் மீதான நம்பிக்கையில்லா தீர்மானத்தை விவாதிக்கக் கோரி எதிர்க்கட்சிகள் முழக்கமிட்டனர். ஒன்றிய அமைச்சர்களை மட்டும் பேச அனுமதித்ததற்கு எதிர்ப்பு தெரிவித்தனர்.