மருத்துவ காப்பீட்டு அட்டை எடுக்க சேவை மையம் அமைக்க வேண்டும்

 

பொன்னமராவதி,டிச.11: பொன்னமராவதியில் விரிவான மருத்துவக்காப்பீட்டு அடையாள அட்டை எடுக்கும் நிரந்த சேவை மையம் அமைக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். தமிழக அரசின் விரிவான மருத்துவக் காப்பீட்டு அட்டை வழங்கப்பட்டுள்ளது. பல ஆண்டுகளுக்கு முன்னர் கிராமங்கள் தோறும் சென்று இதற்கான முகாம் அமைத்து இதற்கான அடையாள அட்டை எடுத்துக்கொடுக்கப்பட்டது.

அதன் பின்னர் ரேஷன் கார்டை வைத்து கிராம நிர்வாக அலுவலர்கள் மூலம் பொதுமக்களுக்கு வழங்கப்பட்டது. இவை அனைத்தும் நடைபெற்று பல வருடங்கல் ஆகிவிட்டது. இதனால் பலருக்கு இந்த அட்டை இல்லை. கையில் வைத்திருப்போர் சிகிச்சை பெற அவசரமாக மருத்துவமனையில் இந்த மருத்துவக்காப்பீட்டு அட்டையை காண்பித்தால் இது செயலழந்து விட்டது. என சொல்லப்படுகின்றது.

இதன் பின்னர் புதுக்கோட்டை கலெக்டர் அலுவலகத்தில் இதற்கான சேவை மையத்திற்கு சென்று குடும்ப உறுப்பினர்களின் ஆதார் எண்ணுடன் கிராம நிர்வாக அலுவலர் சான்றிட்ட கடிதத்துடன் சென்று அட்டை எடுக்க வேண்டும் என்ற நிலை ஏற்படுகின்றது. எனவே புதிதாக பொன்னமராவதி பகுதியில் உள்ள அனைத்து கிராமங்களுக்கும் முகாம் அமைத்தும் பொன்னமராவதியில் நிரந்தர விரிவான மருத்துவ காப்பீட்டு அட்டை எடுக்கும் சேவை மையம் அமைத்தும் இப்பகுதியில் உள்ள அனைத்து மக்களும் மருத்துவக்காப்பீடு மூலம் மருத்துவ சிகிச்சை பெற நடவடிக்கை எடுக்கவேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

 

The post மருத்துவ காப்பீட்டு அட்டை எடுக்க சேவை மையம் அமைக்க வேண்டும் appeared first on Dinakaran.

Related Stories: