இதற்கு உலகின் பல நாடுகளும் வரவேற்றுள்ளன. இஸ்ரேலும் இதற்கு வரவேற்பு தெரிவித்துள்ளது. ஆனால் அல் பஷீத் ஆசாத் ஆட்சியில் நிறுவப்பட்ட ரசாயான ஆயுத கிடங்குகள், ஏவுகணை கிடங்குகள் சிரியா கிளர்ச்சியார்கள் கைகளில் கிடைத்தால் தங்கள் நாட்டுக்கு அச்சுறுத்தல் ஏற்படும் என அஞ்சி சிரியா தலைநகர் டமாஸ்கஸ் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் சிரியாவின் முந்தைய அரசின் ராணுவ இலக்குகளை குறி வைத்து நேற்று முன்தினம் இரவு முழுவதும் வான்வழி தாக்குதல்களை நடத்தியது.
டமாஸ்கஸ்சில் உள்ள முக்கிய இடங்கள் மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்தியதாக மனித உரிமைகளுக்கான சிரியா கண்காணிப்பு அமைப்பு தெரிவித்துள்ளது. மேலும் டமாஸ்கஸ்சை நோக்கி இஸ்ரேல் ராணுவம் முன்னேறி வருவதாக கூறப்படுகிறது. ஆனால் இதுகுறித்து கிளர்ச்சியாளர்கள் குழு எந்த தகவலையும் வௌியிடவில்லை.
The post தற்காப்பு நடவடிக்கையாக சிரியாவில் ஊடுருவி இஸ்ரேல் தாக்குதல் appeared first on Dinakaran.