டாக்கா: வங்கதேசத்தில் இந்துக்கள் மற்றும் பிற சிறுபான்மையினர் மீதான தாக்குதல்கள் அதிகரித்துள்ளது. இந்நிலையில் இரு நாடுகளுக்கும் இடையிலான உயர்மட்ட பேச்சுவார்த்தைக்காக இந்திய வெளியுறவு துறை செயலாளர் விக்ரம் மிஸ்ரி நேற்று ஒரு நாள் பயணமாக டாக்கா சென்றடைந்தார். இதனை தொடர்ந்து வங்கதேச வெளியுறவு செயலாளர் முகமது ஜாஷிம் உதின் மற்றும் விக்ரம் மிஸ்ரி ஆகியோர் விருந்தினர் மாளிகையில் நேரடியாக சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினார்கள். இந்த சந்திப்பிற்கு பின் செய்தியாளர்களை சந்தித்த இந்திய வெளியுறவு துறை செயலர் விக்ரம் மிஸ்ரி, “ சிறுபான்மையினரின் பாதுகாப்பு குறித்த இந்தியாவின் கவலைகளை தெரிவித்தேன். வங்கதேசத்துடன் நேர்மறையான, ஆக்கப்பூர்வமான மற்றும் பரஸ்பர நன்மை பயக்கும் உறவை இந்தியா விரும்புகிறது” என்றார்.
The post சிறுபான்மையினர் மீதான தாக்குதல் எதிரொலி இந்தியா -வங்கதேச வெளியுறவு செயலர்கள் பேச்சுவார்த்தை appeared first on Dinakaran.