இந்நிலையில், தென்கிழக்கு வங்கக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு பகுதி, ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுப்பெற்றது என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அடுத்த 24 மணி நேரத்தில் இலங்கை – தமிழ்நாடு கடற்கரையை ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு நெருங்கும் என தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. வலுவடைந்த காற்றழுத்தம் மேற்கு-வடமேற்கு திசையில் இலங்கை – தமிழ்நாடு நோக்கி நகர்கிறது. காற்றழுத்த தாழ்வு பகுதி தமிழ்நாடு நோக்கி நகர்வதால் டெல்டா பகுதிகளில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேற்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து நாளை தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவக்கூடும். தமிழ்நாட்டில் நாளை, நாளை மறுநாள் ஓரிரு இடங்களில் மிக கனமழைக்கு வாய்ப்புள்ளது. 12 முதல் 20 செ.மீ. வரை மழைக்கு வாய்ப்பு என்பதால் டிச.11, 12 ஆகிய 2 நாட்களுக்கு ஆசஞ்சு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
The post வங்கக்கடலில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுவடைந்தது.. தமிழகத்தில் டெல்டா பகுதிகளில் கனமழைக்கு வாய்ப்பு.!! appeared first on Dinakaran.