கோவை: சோமையம்பாளையம் ஊராட்சி மன்றத் தலைவர் ரங்கராஜை தகுதிநீக்கம் செய்து ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார். சோமையம்பாளையம் ஊராட்சியில் செலவுச்சீட்டுகளை ஆய்வு செய்ததில் நிதி இழப்பு ஏற்பட்டுள்ளது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. டெண்டர் விதிகள் உள்ளிட்டவற்றை பின்பற்றாத விவகாரத்தில் ஊராட்சித் தலைவரை தகுதிநீக்கம் செய்து உத்தரவிடப்பட்டது.