தொடர்ந்து, இலவச பொது மருத்துவம், கண் பரிசோதனை முகாமை தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை தொடங்கி வைத்தார். நிகழ்ச்சியில், காங்கிரஸ் முன்னாள் தலைவர்கள் கே.வி.தங்கபாலு, திருநாவுக்கரசர், எம்.எல்.ஏ.க்கள் ரூபி மனோகரன், பழனி நாடார் துணைத் தலைவர்கள் கோபண்ணா, சொர்ணா சேதுராமன், அமைப்பு செயலாளர் ராம் மோகன், பொதுச்செயலாளர்கள் இல பாஸ்கரன், டி.செல்வம், தளபதி பாஸ்கர்,எஸ்.ஏ.வாசு, இலக்கிய அணி தலைவர் பி.எஸ்.புத்தன், மாவட்ட தலைவர்கள் எம் எஸ் திரவியம், வழக்கறிஞர் எம்.ஏ.முத்தழகன், ஆர்டிஐ பிரிவு துணைத் தலைவர் மயிலை தரணி, கவுன்சிலர்கள் தீர்த்தி, சுரேஷ், எஸ்.எம்.குமார், சூளை ராஜேந்திரன், பா.சந்திரசேகர், துறைமுகம் ரவிராஜ், மா.வே.மலையராஜா, மன்சூர் அலிகான் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
மேலும், சோனியா காந்தி பிறந்தநாளையொட்டி, மத்திய சென்னை கிழக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் வழக்கறிஞர் சிவ ராஜசேகரன் தலைமையில் சர்வமத பிராத்தனை நடைபெற்றது. இதேபோல், சோனியா காந்தி பிறந்த நாளையொட்டி மத்திய சென்னை மேற்கு மாவட்ட காங்கிரஸ் சார்பில் வில்லிவாக்கம் கல்லு கடை பேருந்து நிலையம் அருகில் அன்னதானம் வழங்கும் நிகழ்ச்சி முன்னாள் வட்டார தலைவர் பால ரவிக்குமார் தலைமையில் மாவட்ட பொறுப்பாளர் டி.ஜான்சன் முன்னிலையில் நடைபெற்றது. நிகழ்வில், காங்கிரஸ் கொடியை மாவட்ட பொறுப்பாளர் எஸ்.எம். குமார் ஏற்றி வைத்தார். இதில் காங்கிரஸ் துணைத்தலைவர் பொன் கிருஷ்ணமூர்த்தி அன்னதானம் வழங்கினார். நிகழ்ச்சியில் ஹரி ரங்கன், கஜபதி, கல்யாணசுந்தரம், நாராயணன், சீதா, புருஷோத்தமன், பால விஜயகுமார் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
The post சோனியா காந்தி பிறந்தநாளை முன்னிட்டு இலவச பொது மருத்துவம் கண் பரிசோதனை முகாம்: செல்வப்பெருந்தகை தொடங்கி வைத்தார் appeared first on Dinakaran.