காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோயில்

ஜோதிடத்திற்கும் இறைவனுக்கும் உள்ள தொடர்பை கிரகங்கள் வழியாகவும் பாவகங்கள் வழியாகவும் கிரகங்களின் தீட்சண்ய பார்வைகளின் வழியாகவும் நமக்கு வழிகாட்டுகின்றன. பரிகாரங்கள் என்பது நமக்கு பிரச்னைக்கான பாவத்திற்கோ அல்லது கிரகங்களுக்கோ தொடர்பு நிச்சயம் உண்டு. அதற்கான இறைவனிடம் உங்கள் பிரார்த்தனையை வைக்கும் பொழுது உங்களின் பிரார்த்தனை நிறைவேற்றப்படும். இதனை அறிந்துெகாள்ளவும் தெரிந்து கொள்ளவும் உங்களுக்கு ஜோதிடர் இடைநிலையில் இருந்து உங்களின் ஏற்றத்திற்கு உதவி செய்கிறார். காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் திருத்தலம் பற்றிக் காண்போம். ஏகாம்பரம் என்பது கம்பை ஆற்றின் குறுக்கே எழுந்தருளியுள்ள சிவபெருமான் ஏகாம்பர நாதர் ஆவார். பார்வதி தேவி கம்பை ஆற்றின் குறுக்கே உள்ள மாமரத்தின் கீழ் தன் பாவங்களை போக்கிக்கொள்ள சிவபெருமானை தியானித்து தவம்செய்தார். சிவபெருமானும் அன்னையை சோதிக்க வேண்டி முதலில் அக்னியை பார்வதிதேவியிடம் அனுப்பினார்.

பார்வதி தேவி விஷ்ணுவிடம் வேண்டிக் கொண்டதால் சந்திரனை கொண்டுவந்து வெப்பத்தை தணித்தார். பின்பு கங்கையை அனுப்பினார். கங்கை பார்வதியின் சகோதரிதானே ஆதலால், மாமரத்தையும் பார்வதிதேவியையும் எந்த பாதிப்பும் இன்றி பாதுகாத்து அருளினாள் கங்கை. சிவபெருமானை மகிழ்விக்க மண்ணால் ஒரு சிவலிங்கத்தை மாமரத்தின் அருகில் பிரதிஷ்டை செய்து வழிபட்டதால் மனமுருகிய சிவபெருமான் ஏகாம்பரேஸ்வரராக காட்சி கொடுத்து பாவத்தைப் போக்கினார்.பஞ்சபூத ஸ்தலத்தில் நிலத்தைக் குறிக்கும் ஸ்தலமாக இக்கோயில் உள்ளது. 6ம் நூற்றாண்டில் முதல் இந்தியாவில் உள்ள மிக பழமையான கோயில் ஆகும். தேவாரம் தமிழ்ச் சங்க இலக்கியங்கள் பாடல் பெற்ற ஸ்தலம் இக்கோயிலில் காமாட்சி அம்மன் மற்றும் சுப்பிரமணியர் சந்நிதியும் உள்ளது. கிமு 300ல் மணிமேகலை மற்றும் பெரும்பாணாற்றுப்படை போன்ற சங்க இலக்கியங்களில் இக்கோயில் பற்றிக் குறிப்பிடப்பட்டுள்ளது.

பல்லவர்களால் கட்டப்பட்ட வேதாந்த காசி அப்பர் கோயிலில் அர்ச்சகராக பணியாற்றினார். அப்போதிலிருந்து பிற்காலத்தில் சோழர் மன்னர்களால் புதுப்பிக்கப்பட்டது. பின்னர் காஞ்சி ஆதிசங்கராச்சாரியாரால் புதுப்பிக்கப்பட்டது.ஏகாம்பரநாதர் ஈஸ்வரர் சூரியன் சனி இந்த தெய்வத்திற்கு பெயர் கொடுத்திருக்கிறது. ரிஷபத்திலும் விருச்சிகத்திலும் சூரியன் – சனி பார்வை இருப்போர் இல்ல ரிஷபமும் விருச்சிகமும் ஐந்தாம் பாவமாக வரும். சூரியன் – சனி இணைவுள்ள ஜாதகர் இக்கோயிலுக்கு சென்று வந்தால் சொத்து பிரச்னைகள் தீரும். சொத்துப் பிரச்னைக்காக ஒருவரை இக்கோயிலுக்கு அனுப்பி வைத்தேன் அவர் ஜாதகப்படி இக்கோயிலில் நல்லெண்ணெய் அபிஷேகம் செய்து கோதுமையில் செய்த ஸ்வீட் சுவாமிக்கு நெய்வேத்தியம் பண்ணி அது அங்கு இருக்கிறவங்களுக்கு தானம் பண்ணிட்டு வாங்கன்னு அனுப்பினேன். தொடர்ந்து ஆறு வாரங்கள் செய்ய அனுப்பினேன்.
(இதன் தொடர்ச்சி அடுத்த இதழில்…)

ஜோதிடர் திருநாவுக்கரசு

The post காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோயில் appeared first on Dinakaran.

Related Stories: