மின்நுகர்வோர் குறைதீர் கூட்டம்

 

பெரம்பலூர்,டிச.9: பெரம்பலூர் கோட்டத்திற்கு உட்பட்ட மின்நுகர்வோர் குறைதீர்க்கும்நாள் கூட்டம் நாளை 10ஆம் தேதி நடை பெறுகிறது. தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழக கோட்ட செயற்பொறியாளர் அசோக்குமார் செய்திக்குறிப்பு: பெரம்பலூர் கோட்டத்திற்கு உட்பட்ட மின் நுகர்வோரின் குறைதீர்க்கும் நாள் கூட்டம் பெரம்பலூர் புது பஸ்டாண்டு – நான்கு ரோடு இடையே உள்ள தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர் மானக் கழக (இயக்குதலும் பராமரித்தலும்) கோட்ட செயற்பொறியாளர் அலுவ லகத்தில், நாளை 10ஆம் தேதி செவ்வாய்க்கிழமை, பெரம்பலூர் மின் பகிர் மான வட்ட மேற்பார்வைப் பொறியாளர் மேகலா தலைமையில் நடைபெற உள்ளது. 10-ஆம்தேதி காலை 11 மணிமுதல் பகல் 1 மணி வரை நடைபெறும், பெரம்பலூர் கோட்டத்திற்கு உட்பட்ட மின் நுகர்வோர் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில், மின் நுகர் வோர்கள் தங்களுடைய குறைகளை நேரில் முறையிட்டுத் தீர்வு காணலாம் என கோட்ட செயற்பொறியாளர் அசோக்குமார் வெளியிட்டுள்ள அந்த அறிவிப்பில் தெரிவித்துள் ளார்.

The post மின்நுகர்வோர் குறைதீர் கூட்டம் appeared first on Dinakaran.

Related Stories: