நாகப் பட்டினம்,டிச.7: திட்டச்சேரி அரசு உயர்நிலைப் பள்ளியில் போதை பொருள் ஒழிப்பு, குழந்தைகளுக்கு எதிரான குற்றம் மற்றும் சுய ஒழுக்கம் குறித்து விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது. தலைமை ஆசிரியர் கல்யாணசுந்தரம் தலைமை வகித்தார். உதவி தலைமை ஆசிரியர் நடராஜன் வரவேற்றார். திருக்கண்ணபுரம் சப்-இன்ஸ்பெக்டர் விவேக்ரவிராஜ் முன்னிலை வகித்தார். டிஎஸ்பி பாலகிருஷ்ணன் போதை பொருட்களால் உடல் நலம், மனநலம் கெடுவதுடன், சமூக மரியாதையும் குறையும், வாழ்க்கை முழுதும் பாதிக்கப்படும். பொது ஒழுக்கத்தைக் கடை பிடிப்பதன் மூலம் வாழ்வில் உயர்ந்த இடத்தை அடையமுடியும்.
மாணவர்களின் லட்சியம் கல்வியில் மட்டும் இருந்தால் சிறந்த பதவிகளுக்கு வர முடியும் என பேசினார். தொடர்ந்து நடந்த விளையாட்டுப்போட்டி மற்றும் பேச்சுப்போட்டி வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கினார்.தொடர்ந்து பள்ளி மாணவர்கள் அனைவரும் போதை பொருட்களுக்கு எதிராக உறுதிமொழி ஏற்றுக்கொண்டனர். உடற்கல்வி ஆசிரியர் நிர்மல்ராஜ் நன்றி கூறினார்.
The post திட்டச்சேரி அரசு உயர்நிலைப்பள்ளியில் சுய ஒழுக்கம் குறித்து விழிப்புணர்வு நிகழ்ச்சி appeared first on Dinakaran.