திருப்பூர், டிச. 7: திருப்பூர் மாநகராட்சி மேயர் தினேஷ்குமார் மற்றும் மாநகராட்சி கமிஷனர் ராமமூர்த்தியிடம், ம.தி.மு.க. கவுன்சிலர்கள் நாகராஜன், சாந்தாமணி, குமார் ஆகியோர் ஒரு மனு கொடுத்தனர். அந்த மனுவில் அவர்கள் கூறியிருப்பதாவது: முதல்வர் மு.க.ஸ்டாலின் சிறப்பான முறையில் திராவிட மாடல் ஆட்சி நடத்தி வருகிறார்.
பொதுமக்களுக்கு பல்வேறு திட்டங்களை அறிவித்து செயல் படுத்தி வருகிறார். தற்போது, பனியன் தொழில் பல்வேறு பாதிப்புகளை சந்தித்து வரும் நிலையில், சொத்து வரி உள்ளிட்ட வரி உயர்வுகள் கடும் சிரமத்தை ஏற்படுத்தி வருகிறது. எனவே, வரியை குறைக்க வேண்டும். வாடகை கட்டிடங்களின் சொத்து வரிக்கு ஜி.எஸ்.டி. வரியையும் ரத்து செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறியிருந்தனர்.
The post சொத்து வரியை குறைக்க மனு appeared first on Dinakaran.