செங்கல்பட்டு அருகே பரபரப்பு; பாஜ மகளிரணி நிர்வாகி கார் கண்ணாடி உடைப்பு: சிசிடிவி காட்சி மூலம் போலீசார் விசாரணை


செங்கல்பட்டு: செங்கல்பட்டு அருகே பாஜ மகளிரணி நிர்வாகியின் கார் கண்ணாடிகள் உடைக்கப்பட்ட நிலையில், சிசிடிவி காட்சிகளை கைப்பற்றி மர்ம நபர்கள் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். செங்கல்பட்டு மாவட்டம், மகேந்திராசிட்டி அடுத்த செட்டிபுணியம் ஹயக்ரீவர் நகரில் வசித்து வருபவர் பாஜ கட்சி மாநில மகளிர் அணி செயலாளராக இருப்பவர் மகேஸ்வரி இவரது கணவர் கருணாகரன். இந்நிலையில், மகேஸ்வரி தினமும் தனது காரை வீட்டு வாசலில் நிறுத்துவது வழக்கம். எப்போதும்போல, நேற்றுமுன்தினம் இரவு தனது காரை வீட்டு வாசலில் நிறுத்துவிட்டு தூங்க சென்றுவிட்டார். இதனை தொடர்ந்து மறுநாள் காலை எழுந்து பார்த்தபோது வாசலில் நிறுத்தி வைத்திருந்த கார் கதவு வலது மற்றும் இடது புற கண்ணாடிகள் உடைக்கப்பட்டிருந்தது.

இதனைக்கண்ட மகேஸ்வரி அதிர்ச்சியடைந்துள்ளர். உடனே மகேஸ்வரி மறைமலைநகர் காவல்நிலையத்திற்க்கு தகவல் கொடுத்தார். அதன் அடிப்படையில், சம்பவ இடத்திற்கு வந்த மறைமலைநகர் போலீசார் வீட்டின் அக்கம்பக்கத்தில் உள்ள சிசிடிவி கேமரா காட்சிகளை சேகரித்து அதனை வைத்து காரை உடைத்த நபர்கள் யார், அவர்கள் எந்த பகுதியை சேர்ந்தவர்கள் எதற்காக கார் கண்ணாடியை உடைத்து சேதப்படுத்த வேண்டும். மகேஸ்வரி பெண்கள் தங்கும் விடுதி நடத்தி வருகிறார். அதனால், தொழில் போட்டியா அல்லது பாஜவில் முக்கிய பொறுப்பில் இருப்பதால் அரசியல் போட்டியின் காரணமாக இச்சம்பவம் நடத்ததா அல்லது திருட வந்த மர்ம நபர்களின் கைவரிசையா என பல்வேறு கோணங்களில் மர்ம நபர்கள் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்த பகுதியில் அடிக்கடி திருட்டு சம்பவம் நடைபெற்று வருகின்றது. தற்போது தனது கார் கண்ணாடியை உடைக்கப்பட்டுள்ளது அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது நான் அரசியலில் இருப்பதால் எப்போது வேண்டுமானாலும் வெளியே சென்று வரலாம். எனவே, காவல் துறையினர் பாதுகாப்பு வழங்க வேண்டும் என கூறினார். செங்கல்பட்டு அருகே பாஜ நிர்வாகியின் கார் கண்ணாடி உடைக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

The post செங்கல்பட்டு அருகே பரபரப்பு; பாஜ மகளிரணி நிர்வாகி கார் கண்ணாடி உடைப்பு: சிசிடிவி காட்சி மூலம் போலீசார் விசாரணை appeared first on Dinakaran.

Related Stories: