விழுப்புரம், கள்ளக்குறிச்சி, திருவண்ணாமலை, கடலூர், தருமபுரி, கிருஷ்ணகிரியில் சிறப்பு சிறு வணிகக் கடன் திட்ட முகாம் நடத்தப்படும்: அமைச்சர் பெரிய கருப்பன்

சென்னை: விழுப்புரம், கள்ளக்குறிச்சி, திருவண்ணாமலை, கடலூர், தருமபுரி, கிருஷ்ணகிரியில் சிறப்பு சிறு வணிகக் கடன் திட்ட முகாம் நடத்தப்படும் என அமைச்சர் பெரிய கருப்பன் தெரிவித்துள்ளார். “மழை வெள்ளத்தால் சிறு வணிகர்கள், சிறு கடை உரிமையாளர்கள், சாலையோர வியாபாரிகளுக்கு கடும் பாதிப்பு; கடலூர், விழுப்புரம் மாவட்ட மத்தியக் கூட்டுறவு வங்கி மூலம் சிறப்பு முகாம்கள் நடத்தப்படும்; தகுதியானவர்களுக்கு குறைந்த வட்டியில் ரூ.10,000 முதல் ரூ.1 லட்சம் வரை சிறு வணிகக் கடன் வழங்கப்படவுள்ளது” எனவும் அமைச்சர் தெரிவித்துள்ளார்

The post விழுப்புரம், கள்ளக்குறிச்சி, திருவண்ணாமலை, கடலூர், தருமபுரி, கிருஷ்ணகிரியில் சிறப்பு சிறு வணிகக் கடன் திட்ட முகாம் நடத்தப்படும்: அமைச்சர் பெரிய கருப்பன் appeared first on Dinakaran.

Related Stories: