செய்யாறு, டிச.5: செய்யாறு அடுத்த வெம்பாக்கம் ஊராட்சி ஒன்றியத்தில் உக்கம்பெரும்பாக்கம், நெமிலி, புதுப்பாளையம், மாத்தூர், வெள்ளக்குளம் ஆகிய கிராமங்களில் ரூ.1.67 கோடியில் நடைபெற்று வரும் பல்வேறு வளர்ச்சி திட்ட பணிகளை மாவட்ட ஊரக வளர்ச்சி முகமையின் திட்ட இயக்குனர் மணி நேற்று ஆய்வு செய்து பணிகளை விரைந்து முடிக்க அறிவுறுத்தினார். அதன்படி உக்கம் பெரும்பாக்கம் கிராமத்தில் நடுநிலைப்பள்ளி பழுதுபார்த்தல் பணி, கல்வெட்டு அமைத்தல் பணி, கலைஞர் கனவு இல்லம் திட்டத்தில் வீடு கட்டும் பணி, நெமிலி கிராமத்தில் தனிநபர் கழிவறை கட்டிடங்கள், புதுப்பாளையம் கிராமத்தில் கழிவுநீர் கால்வாய் அமைத்தல் பணி, அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தில் அங்கன்வாடி மைய கட்டிடம் அமைத்தல், புதியநீர் தேக்க தொட்டி அமைத்தல் பணி, தனி நபர் கழிவறை கட்டும் பணி, மாத்தூர் கிராமத்தில் பொது நிதி திட்டத்தின் கீழ் சமுதாய கூட்டத்திற்கான உணவு கூடம் அமைத்தல் பணி வெள்ளகுளம் கிராமத்தில் புதிய மேநீர் தேக்க தொட்டி அமைச்சல்ப பணி, அங்கன்வாடி மைய கட்டிடம் அமைச்சரல் பணி நியாய விலை கடை அமைச்சல் பணி, ஊராட்சி மன்ற கட்டிடம் அமைச்சல் பணி, உள்ளிட்ட பணிகளை ஆய்வு செய்து பணிகளை விரைவாகவும் தரமாகவும் கட்ட ஆலோசனைகளை வழங்கினார். ஆய்வின் போது ஊரக வளர்ச்சி உதவி செயற்பொறியாளர் சபாநாயகம், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் மயில்வாகனன், ஷீலா அன்பு மலர், பொறியாளர்கள் அன்பு, ரவி மலர்வண்ணன், வேளாங்கண்ணி, மற்றும் பணி மேற்பார்வையாளர்கள் உடன் இருந்தனர்.
The post ₹1.67 கோடியில் வளர்ச்சி பணிகள் திட்ட அலுவலர் ஆய்வு வெம்பாக்கம் ஒன்றியத்தில் appeared first on Dinakaran.