ஐதராபாத்: ஒலிம்பிக் பேட்மின்டன் போட்டிகளில் இரு முறை பதக்கங்கள் வென்ற இந்திய வீராங்கனை பி.வி.சிந்து, பாசிடெக்ஸ் டெக்னாலஜிஸ் நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் வெங்கட தத்தா சாயை வரும் 22ம் தேதி, ஜெய்ப்பூரில் திருமணம் செய்ய உள்ளார். இதைத் தொடர்ந்து, 24ம் தேதி ஐதராபாத்தில் திருமண வரவேற்பு நிகழ்ச்சி நடைபெற உள்ளது. இதுகுறித்து சிந்துவின் தந்தை பி.வி.ரமணா கூறுகையில், ‘இரு குடும்பத்தினரும் ஏற்கனவே நன்கு அறிமுகமானவர்கள். இருப்பினும், ஒரு மாதம் முன்பே திருமண நிகழ்வு உறுதி செய்யப்பட்டது’ என்றார். மணமகன் வெங்கட தத்தா சாய் ஐதராபாத்தை சேர்ந்தவர்.
The post பேட்மின்டன் சிந்துவுக்கு 22ம் தேதி திருமணம் appeared first on Dinakaran.