மழையால் விரைவு ரயில் நிறுத்தம்.. அவர்களின் சூழலை புரிந்துகொள்ள வேண்டும்: ஐகோர்ட்!!

சென்னை: யாரும் வேண்டுமென்றே செயல்பட மாட்டார்கள்; அவர்களின் சூழலை புரிந்துகொள்ள வேண்டும் என மழையால் விரைவு ரயிலை நிறுத்தியதால் பயணிகளுக்கு பாதிப்பு ஏற்பட்டதாக கூறி ஐகோர்ட்டில் முறையீடு செய்யப்பட்ட வழக்கில் தலைமை நீதிபதி தெரிவித்துள்ளார். பயணிகளுக்கு ஏற்பட்ட பாதிப்பு குறித்து ரயில்வேயிடம் முறையிட தலைமை நீதிபதி அறிவுறுத்தியுள்ளார். ரயிலில் பயணித்த இளைஞர் இறந்திருந்தால் அது குறித்து கவனிக்க வேண்டும் என அவர் கூறினார். விழுப்புரம் மாம்பழம்பட்டு ரயில் நிலையத்தில் விரைவு ரயில் 10 மணி நிறுத்திவைப்பு என சென்னை உயர்நீதிமன்றத்தில் முறையீடு மனு தாக்கல் செய்யப்பட்டு இருந்தது. அதில், உணவு, தண்ணீர் இல்லாமல் பாதிக்கப்பட்ட பயணிகளுக்கு தலா ரூ.5 ஆயிரம் இழப்பீடு வழங்கக் கோரிக்கை வைக்கப்பட்டு இருந்தது.

The post மழையால் விரைவு ரயில் நிறுத்தம்.. அவர்களின் சூழலை புரிந்துகொள்ள வேண்டும்: ஐகோர்ட்!! appeared first on Dinakaran.

Related Stories: