புதுடெல்லி: உச்ச நீதிமன்றத்தின் அனைத்து விசாரணை அறைகளும் வார விடுமுறைக்கு பிறகு நேற்று காலை 10.30 மணிக்கு வழக்கம்போல் துவங்கியது. இதைத்தொடர்ந்து வழக்கு விசாரணைகளும் தொடர்ந்து நடைபெற்றது. இதுபோன்ற சூழலில் உச்ச நீதிமன்றத்தின் விசாரணை அறை எண் 11 மற்றும் 12 ஆகியவைக்கு இடைப்பட்ட பகுதியில் இருக்கும் காத்திருப்பு அறையில் நேற்று பிற்பகல் திடீரென தீ விபத்து ஏற்பட்டது. இதனால் அங்கு வழக்கு விசாரணைக்காக வந்திருந்த மனுதாரர்கள், வழக்கறிஞர்கள் ஆகியோர் அலறி அடித்துக் கொண்டு ஓடினர். முதற்கட்டமாக இந்த தீ விபத்து மின் கசிவு காரணமாக ஏற்பட்டதாக உறுதி செய்யப்பட்டது.
மேலும் சிறிய அளவில் திடீரென ஏற்பட்ட இந்த தீயை அங்கிருந்த உச்ச நீதிமன்றத்தின் பணியாளர்கள் காத்திருப்பு அறையில் வைக்கப்பட்டிருந்த தீ தடுப்பான் மூலம் அணைத்தனர். மேலும் இதனால் அப்பகுதியில் லேசான புகை மூட்டம் காணப்பட்டது. குறிப்பாக இந்த தீ விபத்து ஏற்பட்ட அறைக்கு அருகில் வழக்கு விசாரணைகளை மேற்கொண்டிருந்த நீதிபதிகள் பேலா.எம்.திரிவேதி மற்றும் எம்.எம் சுந்தரேஷ் சிறிது நேரம் விசாரணையை நிறுத்தி வைத்தனர்.
The post உச்ச நீதிமன்றத்தில் திடீர் தீ appeared first on Dinakaran.