நிதின் கட்கரி விளக்கம்: அரசியல் திருப்தியடையாத ஆன்மாக்கள் நிறைந்த கடல்


நாக்பூர்: ‘அரசியல் என்பது திருப்தி அடையாத ஆன்மாக்கள் நிறைந்திருக்கும் கடல்’ என ஒன்றிய அமைச்சர் நிதின் கட்கரி கூறி உள்ளார். நாக்பூரில் புத்தக வெளியீட்டு விழா ஒன்றில் பேசிய ஒன்றிய அமைச்சர் நிதின் கட்கரி கூறியதாவது: சமரசங்கள், நிர்பந்தங்கள், எல்லைகள் மற்றும் முரண்பாடுகள் தான் வாழ்க்கை. குடும்பஸ்தன், சமூக பணியாளர், அரசியல்வாதி, தொழிலதிபர் என அனைவரின் வாழ்க்கையும் சவால்கள், சச்சரவுகள் நிறைந்ததே. அவற்றை எதிர்கொள்வதற்கு ஒவ்வொருவரும் வாழும் கலையை கற்றுக் கொள்ள வேண்டும். ராஜஸ்தானில் ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொண்டேன்.

அப்போது, அரசியல் என்பது திருப்தி அடையாத ஆத்மாக்களின் கடல் என்று கூறினேன். இங்கு எல்லோரும் கவலையாக இருக்கிறார்கள். தொழில் அதிபருக்கு தன்னால் எம்எல்ஏவாக முடியவில்லையே என்ற கவலை. எம்எல்ஏ ஆனவருக்கு அமைச்சராக முடியவில்லையே என கவலை. அமைச்சரானவருக்கு நல்ல துறை கிடைக்கவில்லையே, முதலமைச்சராக முடியவில்லையே என கவலை. முதலமைச்சரானவருக்கு தன்னை எப்போது மேலிடம் பதவியில் இருந்து இறக்கிவிடுமோ என்ற கவலை. எனவே, வாழ்க்கையில் பிரச்னைகள் எப்போதுமே பெரும் சவாலானவை. அதை எதிர்கொண்டு தொடர்ந்து முன்னேறுவதுதான் வாழும் கலையாகும். இவ்வாறு அமைச்சர் கூறினார்.

The post நிதின் கட்கரி விளக்கம்: அரசியல் திருப்தியடையாத ஆன்மாக்கள் நிறைந்த கடல் appeared first on Dinakaran.

Related Stories: