புயலால் ஏற்பட்ட சேதங்களை ஒன்றிய அரசு பார்வையிட்டு உடனடியாக நிவாரணம் தர வேண்டும்: விஜய்வசந்த் எம்.பி கோரிக்கை

டெல்லி: புயலால் ஏற்பட்ட சேதங்களை ஒன்றிய அரசு பார்வையிட்டு உடனடியாக நிவாரணம் தர வேண்டும் என காங்கிரஸ் எம்.பி விஜய்வசந்த் கோரிக்கை விடுத்துள்ளார். வங்கக்​கடல் பகுதி​களில் நிலவிய ஃபெஞ்சல் புயல், புதுச்​சேரி அருகே 30-ம் தேதி இரவு 10.30 முதல் 11.30 மணி அளவில் கரையைக் கடந்​தது. இதன் காரணமாக புதுச்​சேரி மற்றும் அதனை சுற்றி​யுள்ள தமிழகப் பகுதி​களில் அதிக​னமழை பெய்​துள்ளது. அதிகபட்சமாக விழுப்புரம், புதுச்சேரி, கடலூர் உள்ளிட்ட மாவட்டங்கள் அதிக சேதங்களை சந்தித்து உள்ளன. கடந்த 2 நாட்களாக புயல் கரையை கடந்து வந்த நிலையில் கனமழை கொட்டி தீர்த்தது. கனமழை காரணமாக நீர்நிலைகள் நிரம்பி சாலைகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு வருகிறது.

இதனால் பல்வேறு மாவட்டங்கள் உள்ள கிராமங்கள் தீவு போல் காட்சி அளிக்கின்றன. இந்த நிலையில் தமிழ்நாட்டின் பல்வேறு மாவட்டங்களை புரட்டிப்போட்ட புயல் மற்றும் வெள்ள பாதிப்புகள் தொடர்பாக நாடாளுமன்றத்தில் விவாதிக்க வேண்டும் என காங்கிரஸ் எம்பி விஜய் வசந்த் நோட்டீஸ் வழங்கி உள்ளார். அதில், தமிழகத்தில் பெங்கால் புயல் பாதிப்பு குறித்து விவாதிக்க லோக்சபாவில் ஒத்திவைப்பு தீர்மானம் கொண்டு வந்துள்ளேன்.மாநிலத்திற்கு 1000 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்ய ஒன்றிய அரசிடம் கோரிக்கை வைப்பதுடன், சொத்துக்களுக்கு ஏற்பட்டுள்ள பெரும் சேதத்தை மதிப்பிடுவதற்கு ஒன்றிய குழுவை நியமிக்குமாறு மத்திய அரசை கேட்டுக்கொள்கிறேன். இவ்வாறு நோட்டீஸ் அளித்துள்ளார்.

The post புயலால் ஏற்பட்ட சேதங்களை ஒன்றிய அரசு பார்வையிட்டு உடனடியாக நிவாரணம் தர வேண்டும்: விஜய்வசந்த் எம்.பி கோரிக்கை appeared first on Dinakaran.

Related Stories: