சபரிமலையில் பலத்த மழையிலும் குவியும் பக்தர்கள்: 75 ஆயிரத்திற்கும் அதிகமானோர் தரிசனம்

திருவனந்தபுரம்: சபரிமலையில் கடந்த சில தினங்களாக சராசரியாக தினமும் 75 ஆயிரத்திற்கும் அதிகமான பக்தர்கள் தரிசனம் செய்து வருகின்றனர். நேற்று ஞாயிற்றுக்கிழமை என்பதால் பக்தர்கள் அதிக அளவில் குவிந்தனர். அதிகாலை 3 மணிக்கு நடை திறந்தபோது பக்தர்கள் நீண்ட வரிசையில் தரிசனத்திற்காக காத்திருந்தனர். நேற்று காலை முதல் பம்பையிலும், சன்னிதானத்திலும் தொடர்ந்து பலத்த மழை பெய்தது.

ஆனால் மழையை பொருட்படுத்தாமல் ஏராளமான பக்தர்கள் ரெயின் கோட் அணிந்தபடி மலையேறி தரிசனம் செய்தனர். சபரிமலையில் நேற்று மழையுடன் மதியம் பனிமூட்டமும் காணப்பட்டது. காலையில் தொடங்கிய மழை மதியம் ஓய்ந்தபோதிலும் பிற்பகலில் மீண்டும் வலுத்தது. நேற்று 75 ஆயிரத்திற்கும் அதிகமான பக்தர்கள் தரிசனம் செய்தனர். பத்தனம்திட்டா மாவட்டத்திற்கு இன்று மஞ்சள் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது.

The post சபரிமலையில் பலத்த மழையிலும் குவியும் பக்தர்கள்: 75 ஆயிரத்திற்கும் அதிகமானோர் தரிசனம் appeared first on Dinakaran.

Related Stories: