மண்டபம் அருகே நெடுஞ்சாலையில் விழுந்த மரம்

மண்டபம்,நவ.29:மண்டபம் அருகே சூறாவளி காற்றில் சிக்கி ராமேஸ்வரம் பகுதிக்கு செல்லும் தேசிய நெடுஞ்சாலையில், மரம் விழுந்ததில் அரை மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. மண்டபம் அருகே வேதாளை ஊராட்சியில் கூட்டச்சாலை நகர் பேருந்து நிறுத்தம் பகுதியில், பழமையான ஆல மரம் இருந்தது. இந்த மரம் ராமநாதபுரம் முதல் ராமேஸ்வரம் வரை செல்லும் தேசிய நெடுஞ்சாலை அருகே அமைந்துள்ளது. இந்நிலையில் இந்த ஆலம் மரம் நேற்று முன்தினம் சூறாவளி காற்றில் சிக்கி முறிந்து தேசிய நெடுஞ்சாலையில் விழுந்தது.

இதுகுறித்து தகவல் அறிந்து அப்பகுதிக்கு வந்த மண்டபம் தீயணைப்புத் துறையினர் மற்றும் அப்பகுதி பொதுமக்கள் சேர்ந்து சாலையில் விழுந்த மரத்தை ஜே.சி.பி இயந்திரம் மூலம் அகற்றினர். இதனால் அந்த பகுதியிலும் அரை மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதனையடுத்து ராமநாதபுரத்தில் இருந்து ராமேஸ்வரம் செல்லவும், ராமேஸ்வரத்தில் இருந்து ராமநாதபுரத்தில் செல்லவும் வந்த வாகனங்கள் இரண்டு பக்கமும் காத்திருந்து கடந்து சென்றன.

The post மண்டபம் அருகே நெடுஞ்சாலையில் விழுந்த மரம் appeared first on Dinakaran.

Related Stories: