ஈரோடு,நவ.29: ஈரோடு கலெக்டர் அலுவலக வளாகத்தில் தமிழ்நாடு அரசு கிராம பகுதி சுகாதார செவிலியர் சங்கங்களின் கூட்டமைப்பினர் நேற்று மாலை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட தலைவர்கள் சாந்தா,லதா,காஞ்சனா தலைமை தாங்கினர். கூட்டமைப்பு ஒருங்கிணைப்பாளர்களான செந்தாமலர், உஷாராணி ஆகியோர் கோரிக்கை குறித்து பேசினர். சிறப்பு அழைப்பாளராக அரசு ஊழியர்கள் சங்கத்தின் மாநில துணை தலைவர் சாமி குணம் பங்கேற்று பேசினார்.
இதில், தமிழகத்தில் முழுவதும் கடந்த 3 ஆண்டுகளாக துணை சுகாதார நிலையங்களில் பயிற்சி முடித்து பணிக்காக காத்திருக்கும் செவிலியர்களை கொண்டு, காலிப்பணியிடங்களில் எவ்வித நிபந்தனையும் இன்றி உடனடியாக நிரப்பிட வேண்டும். கூடுதல் துணை மைய பொறுப்பு பணிகளை மேற்கொள்ள நிர்பந்திப்பதை கைவிட வேண்டும். பதவி உயர்வு பெற்ற செவிலியர்களை மீண்டும் அதே பொறுப்பு பணிகளுக்கு நியமிப்பதை தவிர்க்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதில், ஏராளமான செவிலியர்கள் கலந்து கொண்டனர்.
The post கிராம சுகாதார செவிலியர்கள் ஆர்ப்பாட்டம் appeared first on Dinakaran.