கொடுமுடி,நவ.29: நீண்டகாலம் நிலுவையில் உள்ள பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கொடுமுடியில் வருவாய்துறை அலுவலர்கள் பணி புறக்கணிப்பு மற்றும் தொடர் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். வருவாய்த்துறை ஊழியர்களுக்கு பணி நெருக்கடி அளிப்பதை தவிரத்திட வேண்டும். சிறப்பு பணிகள் மற்றும் சான்றிதழ் பணிக்கு வட்டம் தோறும் துணை வட்டாட்சியர் பணியிடத்தை ஏற்படுத்த வேண்டும். ஏற்கனவே அரசால் ஏற்கப்பட்ட கோரிக்கைகளான 3 ஆண்டுக்கு மேற்பட்ட அலுவலக உதவியாளர் காலிப்பணியிடங்களை நிரப்ப வேண்டும்.
பேரிடர் மேலாண்மை பணியிடங்களை மீண்டும் ஏற்படுத்த வேண்டும். பல்வேறு திட்டங்களின் கீழ் பெறப்படும் முடிவு செய்திட உரிய கால அவகாசம் மற்றும் திட்டங்களை செயல்படுத்த போதிய நிதி ஒதுக்கீடு வழங்கப்பட வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு வருவாய்த்துறை அலுவலர் சங்கத்தினர் தொடர் வேலை நிறுத்தம் மற்றும் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட போவதாக அறிவித்திருந்தனர். அதன்படி, நேற்று கொடுமுடி தாலுக்கா அலுவலகத்தில் பணியை புறக்கணித்து தொடர் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
The post கொடுமுடியில் வருவாய்துறை அலுவலர்கள் காத்திருப்பு போராட்டம் appeared first on Dinakaran.