லாட்டரி சீட்டு விற்றவர் கைது

 

ஈரோடு, நவ.26: தமிழ்நாடு அரசால் தடை செய்யப்பட்டுள்ள லாட்டரி விற்பனையை தடுக்க மாவட்ட போலீசார் தீவிர நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர். அதன்படி ஈரோடு மாவட்டம், பெருந்துறை போலீசார் தங்களது காவல் எல்லைக்குட்பட்ட விஜயமங்கலம் பகுதியில் நேற்று முன்தினம் கண்காணிப்பில் ஈடுபட்டிருந்தனர்.

அப்போது, அங்குள்ள ஹோட்டல் ஒன்றின் அருகில் சந்தேகத்துக்கிடமாக நடமாடிய நபரை பிடித்து விசாரித்ததில் அவர், வெள்ளோடு அருகே உள்ள நத்தக்காட்டுபாளையம் பகுதியை சேர்ந்த பாலகிருஷ்ணன் (63) என்பதும், தமிழ்நாடு அரசால் தடை செய்யப்பட்டுள்ள வெளிமாநில லாட்டரி சீட்டுகளை விற்பனை செய்து வந்ததும் தெரியவந்தது. இதையடுத்து போலீசார் அவர் மீது வழக்கு பதிவு செய்து கைது செய்தனர். மேலும், அவரிடம் இருந்து ரூ.500 மதிப்பிலான 5 லாட்டரி சீட்டுகள் மற்றும் எண்கள் எழுதப்பட்ட வெள்ளை தாள்கள் ஆகியவற்றையும் பறிமுதல் செய்தனர்.

The post லாட்டரி சீட்டு விற்றவர் கைது appeared first on Dinakaran.

Related Stories: