வெளிமாநில தொழிலாளர்கள் குறித்து தொழில் நிறுவனங்கள் பதிவு செய்து கொள்ள சிறப்பு முகாம்

 

ஈரோடு, நவ.23: ஈரோடு மாவட்டத்தில் செயல்பட்டு வரும் கடைகள், நிறுவனங்கள், உணவு நிறுவனங்கள், மோட்டார் போக்குவரத்து நிறுவனங்கள், பீடி சுருட்டு நிறுவனங்கள், மருத்துவமனைகள், விவசாயம் சார்ந்த தொழில்கள், கோழிப் பண்ணைகள் உள்ளிட்ட அனைத்து வணிக நிறுவனங்களிலும் பணிபுரியும், மாநிலம் விட்டு மாநிலம் பெயர்ந்த வெளி மாநில தொழிலாளர்கள் தொடர்பான விவரங்களை தொழிலாளர் துறை வலைத்தளமான https://labour.tn.gov.in ல் சம்பந்தப்பட்ட தொழில் நிறுவனங்கள் பதிவு செய்திட வேண்டும்.

இதற்கான சிறப்பு முகாம் வரும் 26ம் தேதி ஈரோடு ஆர்கேவி ரோட்டிலும், 28ம் தேதி பெருந்துறை ரோட்டிலும், டிசம்பர் 3ம் தேதி கொடுமுடியிலும், 6ம் தேதி திண்டலிலும், 9ம் தேதி பவானியிலும், 12ம் தேதி பெருந்துறையிலும், 18ம் தேதி கோபியிலும், 24ம் தேதி சத்தியமங்கலத்திலும் அந்தந்த பகுதி தொழிலாளர் உதவி ஆய்வாளர் மூலமாக பதிவுகள் மேற்கொள்ளப்பட உள்ளன. எனவே அந்தந்த பகுதியில் உள்ள தொழில் நிறுவனத்தினர் தங்களிடம் உள்ள வெளி மாநில தொழிலாளர்கள் குறித்த பதிவுகளை மேற்கொள்ளுமாறு தொழிலாளர் உதவி ஆணையர் (அமலாக்கம்) ஜெயலட்சுமி தெரிவித்துள்ளார்.

The post வெளிமாநில தொழிலாளர்கள் குறித்து தொழில் நிறுவனங்கள் பதிவு செய்து கொள்ள சிறப்பு முகாம் appeared first on Dinakaran.

Related Stories: