தூத்துக்குடி, நவ. 29: நான்கு வயது சிறுமிக்கு பாலியல் தொந்தரவு செய்த வழக்கில் தொழிலாளிக்கு ஏழு வருடம் கடுங்காவல் சிறை தண்டனை விதித்து தூத்துக்குடி போக்சோ நீதிமன்றம் தீர்ப்பு அளித்தது. தூத்துக்குடியை சேர்ந்தவர் பெர்க்மான்ஸ் (48). கூலித்தொழிலாளி. இவரை, கடந்த 2022ம் ஆண்டு 4 வயது சிறுமியை பாலியல் தொந்தரவு செய்த வழக்கில் தூத்துக்குடி அனைத்து மகளிர் காவல் நிலைய போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிந்து கைது செய்தனர். இவ்வழக்கின் விசாரணை தூத்துக்குடி போக்சோ நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி சுரேஷ், குற்றம்சாட்டப்பட்ட பெர்க்மான்சுக்கு 7 வருடங்கள் கடுங்காவல் சிறை தண்டனை மற்றும் ரூ.10 ஆயிரம் அபராதம் விதித்து தீர்ப்பு கூறினார். மேலும் பாதிக்கப்பட்ட சிறுமிக்கு அரசு நிவாரண நிதியில் இருந்து ரூ.2 லட்சம் வழங்கவும் உத்தரவிட்டார்.
The post 4 வயது சிறுமிக்கு பாலியல் தொந்தரவு தொழிலாளிக்கு 7 ஆண்டு சிறை appeared first on Dinakaran.