சிவகங்கை, நவ.29: சிவகங்கை மாவட்டத்தில் தொடர்ந்து நடைபெறும் தமிழ்நாடு வருவாய்த்துறை அலுவலர் சங்க தொடர் காத்திருப்பு போராட்டத்தால் வருவாய்த்துறை பணிகள் பாதிப்படைந்து வருகிறது. 3 ஆண்டுகளுக்கு மேற்பட்ட அலுவலக உதவியாளர் காலிப்பணியிடங்களை உனடியாக நிரப்ப வேண்டும்.
கருணை அடிப்படையிலான பணி நியமனத்திற்கான உச்சவரம்பு 5 சதவீதமாக குறைக்கப்பட்டுள்ளதை ரத்து செய்து மீண்டும் 25சதவீதமாக நிர்ணயிக்க வேண்டும். வருவாய்த்துறையில் உள்ள பணியிடங்களை கலைக்கும் நடவடிக்கைகளை முற்றிலும் கைவிட வேண்டும். பேரிடர் மேலாண்மை பிரிவில் கலைக்கப்பட்ட 97பணியிடங்களை உடனடியாக வழங்கிட வேண்டும்.
2ஆண்டுகளுக்கான துணை ஆட்சியர் பட்டியல், நடப்பாண்டிற்கான மாவட்ட வருவாய் அலுவலர் பட்டியலை விரைந்து வெளியிட வேண்டும் உள்ளிட்ட 8அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி கடந்த 26ம் தேதி முதல் மாவட்டம் முழுவதும் வருவாய்த்துறை அலுவலர்கள் பணிகளை புறக்கணித்து போராட்டம் நடத்தி வருகின்றனர். இதில் 100க்கும் மேற்பட்ட ஊழியர்கள் பங்கேற்றுள்ளனர். தொடர்ந்து 3 நாட்களாக நடைபெறும் போராட்டத்தால் கலெக்டர் அலுவலகம், அனைத்து தாலுகா அலுவலகங்கள், ஆர்டிஓ அலுவலகம் உள்ளிட்ட அலுவலகங்களில் பல்வேறு பணிகள் பாதிக்கப்பட்டு வருகிறது.
The post காத்திருப்பு போராட்டத்தால் அலுவலக பணி பாதிப்பு appeared first on Dinakaran.