மதுரை, நவ. 29: மதுரை சட்டக்கல்லூரிக்கு புதிதாக உபகரணங்கள் வாங்கும் பணிகளை பொதுப்பணித்துறை தீவிரப்படுத்தியுள்ளது. மதுரை சட்டக்கல்லூரியில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவ-மாணவியர் பயின்று வருகின்றனர். இக்கல்லூரியின் கட்டிடம் பழுதடைந்ததால் அதை இடித்துவிட்டு புதிய கட்டிடம் கட்டப்பட்டுள்ளது. இதையடுத்து, புதிய கல்லூரி கட்டிடத்திற்கான உபகரணங்கள் கொள்முதல் செய்யும் பணிகள் நடந்து வருகின்றன.
இதுகுறித்து, பொதுப்பணித்துறை அதிகாரிகள் கூறியதாவது: ரூ.3 கோடியில் கல்லூரியில் உள்ள வகுப்பறைகளுக்கான மேஜைகள், எழுதும் பலகைகள், கணினிகள், முதல்வர் அறை மற்றும் கல்லூரியின் நிர்வாகத் தேவையான தளவாட பொருட்கள் உள்ளிட்ட பல்வேறு உபகரணங்களுக்கான பட்டியல் தயாரிக்கப்பட்டு அவற்றை, கொள்முதல் செய்யும் பணிகள் தீவிரமாக நடந்து வருகின்றன. கொள்முதல் செய்யப்படும் உபகரணங்கள் உரிய முறையில் ஆய்வு செய்ய அதிகாரிகளுக்கும் உத்தரவிடப்பட்டுள்ளது. இப்பணிகள், விரைவில் முடிவடையும், என்றனர்.
The post சட்டக்கல்லூரிக்கு ரூ.3 கோடியில் புதிய பொருட்கள் கொள்முதல் appeared first on Dinakaran.