அம்மையநாயக்கனூர் பேரூராட்சி கூட்டம் ரூ.1.5 கோடி மதிப்பீட்டில் தார் சாலை அமைக்க தீர்மானம்

 

நிலக்கோட்டை, நவ. 29: அம்மையநாயக்கனூர் பேரூராட்சியில் மாதாந்திர கவுன்சிலர் கூட்டம் நடைபெற்றது. தலைவர் செல்வராஜ் தலைமை வகித்தார். செயல் அலுவலர் பூங்கொடிமுருகு முன்னிலை வகித்தார். துணை தலைவர் விமல்குமார் வரவேற்றார். கூட்டத்தில் ரூ.1.5 கோடி ரூபாய் மதிப்பில் நாயககவுண்டன்பட்டி முதல் ஜல்லிபட்டி வரை புதிய தார் சாலை அமைக்கவும், அம்மாபட்டி சர்ச் பகுதியில் எம்எல்ஏ மேம்பாட்டு நிதி ரூ.7 லட்சம் செலவில் பேவர் பிளாக் சாலை அமைத்தல், தொடர் மழை காரணமாக மேற்கொள்ள வேண்டிய சுகாதார பணிகள் குறித்து தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

தொடர்ந்து அம்மையநாயக்கனூர் பேரூராட்சி பகுதிக்கு குடிநீர் ஆதாரமாக விளங்கும் அன்னசமுத்திர கண்மாய்க்கு சிறுமலை ஆறு நீர்த்தேக்கத்திலிருந்து தண்ணீர் கொண்டு வருவது குறித்து ஆலோசிக்கப்பட்டது. இதில் கவுன்சிலர்கள் கவிதா ராஜாங்கம், சத்தியா, காசியம்மாள், கவிதா, முகமதுநசீர், கருணாகரன், மாரியப்பன், சுகாதார மேற்பார்வையாளர் அசோக்குமார், தலைமை எழுத்தர் விவேக் உள்பட பலர் கலந்து கொண்டனர். சுகாதார ஆய்வாளர் செந்தில்குமார் நன்றி கூறினார்.

The post அம்மையநாயக்கனூர் பேரூராட்சி கூட்டம் ரூ.1.5 கோடி மதிப்பீட்டில் தார் சாலை அமைக்க தீர்மானம் appeared first on Dinakaran.

Related Stories: