இதையடுத்து, காவல் நிலையம், வட்டாட்சியர் அலவலகம் போன்ற இடங்களில் மனு அளித்தும் எந்த தீர்வும் கிடைக்காததால், கடந்த 2008ம் ஆண்டு செங்கல்பட்டு நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இதில், கடந்த 2022ம் ஆண்டு நவம்பர் மாதம் தீர்ப்பு வழங்கப்பட்டது. அதில், 2 சென்ட் மனை ராஜேந்திரனுக்கு சொந்தம் என்றும், மனையை திருப்போரூர் வட்டாட்சியர் அளவீடு செய்து மீட்டு ஒப்படைக்க வேண்டும் என்றும் தீர்ப்பு வழங்கப்பட்டது.
அதன்படி, கடந்த 2 ஆண்டுகளாக மனையை தன்னிடம் மீட்டு அளவீடு செய்து ஒப்படைக்க கோரி ராேஜந்திரன், சரளா தம்பதியர் வட்டாட்சியர் அலுவலகத்தில் மனு செய்தனர். ஆனால், கடந்த 2 ஆண்டுகளாக எந்த நடவடிக்கையும் எடுக்கப்படாததால் மீண்டும் திருப்போரூர் வட்டாட்சியருக்கு உத்தரவிடக்கோரி செங்கல்பட்டு நீதிமன்றத்தில் ராேஜந்திரன் வழக்கு தொடர்ந்தார். இதில், மனையை சர்வேயர் கொண்டு அளந்து ஒப்படைக்க திருப்போரூர் வட்டாட்சியருக்கு நீதிமன்றம் உத்தரவிட்டது.
ஆனால், 15 நாட்களாக எந்த நடவடிக்கையும் எடுக்கப்படாததால் நேற்று ராஜேந்திரன், சரளா தம்பதியர் திருப்போரூர் வட்டாட்சியர் அலுவலக வாயிலில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இதுகுறித்து, தகவல் அறிந்ததும் துணை வட்டாட்சியர் கார்த்திக் மற்றும் திருப்போரூர் போலீசார் அங்கு வந்து போராட்டத்தில் ஈடுபட்ட தம்பதியரிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். மனையை அளக்க இன்றே உத்தரவு போடுவதாக அவர் உறுதியளித்ததை அடுத்து போராட்டத்தை கைவிட்ட தம்பதியர் திரும்பிச்சென்றனர். வயது முதிர்ந்த தம்பதியரின் திடீர் போராட்டத்தால் திருப்போரூர் வட்டாட்சியர் அலுவலகத்தில் பரபரப்பு ஏற்பட்டது.
The post வீட்டுமனையை அளந்து தராததை கண்டித்து வட்டாட்சியர் அலுவலகம் முன்பு அமர்ந்து தம்பதியினர் போராட்டம்: திருப்போரூரில் பரபரப்பு appeared first on Dinakaran.