சென்னை: வக்ஃபு மசோதா பிரச்சனைக்குத் தீர்வு காண இஸ்லாமிய அறிஞர்கள் இடம்பெறும் சிறப்புக் குழுவை அமைக்க ஒன்றிய அரசுக்கு இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தேசிய தலைவர் காதர் மொய்தீன் வலியுறுத்தியுள்ளார். வக்ஃபு மசோதாவுக்கு தற்போது வரையும் தொடர்ந்து எதிர்ப்புகள் குவிந்து கொண்டே இருக்கின்றன எனவும் தெரிவித்தார்.