சென்னை: அம்பத்தூரில் உள்ள தனியார் மின்சார பைக் விற்பனை நிலையத்தின் முன், வாடிக்கையாளர் ஒருவர் அவரது பைக்கிற்கு தீவைத்து போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. பைக்கில் ஏற்பட்ட தொழில்நுட்ப கோளாறை சரிசெய்து கொடுக்காமல் ஏமாற்றுவதாகப் புகார் தெரிவித்த நிலையில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.