பிச்சாவரம் அலையாத்தி காடுகள் 413 ஹெக்டர் அளவில் உள்ளது. அதேபோல் முத்துப்ேபட்டை பகுதியில் உள்ள அலையாத்தி காடுகள் 2382 ஹெக்டேர் அளவில் உள்ளது. இந்நிலையில் அதிகப்படியான உமிழ்வால் கடல் மட்டம் உயர்வு காரணமாக 2100ம் ஆண்டில் திருவாரூர் மாவட்டம் முத்துப்பேட்டை அலையாத்தி காடு மற்றும் பிச்சாவரம் அலையாத்தி காடுகள் காணாமல்போக வாய்ப்புள்ளதாக ஆய்வுகளில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் கடலில் அலையாத்தி காடுகள் மூழ்குவதால் அந்த காட்டுப்பகுதிகளில் இருக்கும் அதிகப்படியான கார்பன்கள் சுற்றுச்சூழலில் கலந்து பாதிப்பை ஏற்படுத்தும். 2.24 டிராகிராம் கார்பன் வெளியாகும் என ஆய்வில் தெரியவந்துள்ளது. இதனால் அங்குள்ள மீன்கள் கடல்சார் உயிரினங்கள் மற்றும் அங்கு வரும் சுற்றுலா பயணிகளுக்கு பெரும் ஆபத்தை ஏற்படும் என ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
The post கடல் மட்ட உயர்வால் 2100ம் ஆண்டில் பிச்சாவரம், முத்துப்பேட்டை அலையாத்தி காடுகள் காணாமல் போகும்: ஆய்வில் அதிர்ச்சி தகவல் appeared first on Dinakaran.