மேலும் செங்கல்பட்டு, காஞ்சிபுரம், ஸ்ரீபெருமந்தூர் உள்பட பல்வேறு பகுதிகளுக்கு அரசு பேருந்துகளும், கல்லூரி பேருந்துகளும் இயக்கப்பட்டு வருகின்றன. திருவள்ளூரில் இருந்து மணவாளநகர், மேல்நல்லாத்தூர் வழியாக அனைத்து வாகனங்களும் இயக்கப்பட்டு வருகின்றன. இந்நிலையில் மேல்நல்லாத்தூர் ஊராட்சி மன்ற அலுவலகம் அருகில் அரசு பள்ளி செயல்பட்டு வருகிறது. இங்கு 500க்கும் மேற்பட்ட மாணவ, மாணவியர்கள் பயின்று வருகின்றனர். இதனால் காலை மற்றும் மாலை வேலைகளில் பள்ளிக்கு வந்து செல்லும் மாணவ, மாணவியர் மற்றும் அவர்களது பெற்றோர் வீட்டிலிருந்து வரும் போதும், வீட்டிற்கு செல்லும் போதும் திருவள்ளூர் – ஸ்ரீபெரும்புதூர் சாலையை தாண்டித்தான் செல்ல வேண்டி உள்ளது.
ஆனால் ஊராட்சி மன்ற அலுவலகம் எதிரில் வேகத்தடை இல்லாததால் தொழிற்சாலை பேருந்துகள், அரசு பேருந்துகள், கல்லூரி பேருந்துகள் உள்பட அனைத்து வாகனங்களும் வேகமாக சென்று வருகின்றன. இதனால் எதிர்பாராத விதமாக அடிக்கடி விபத்துக்கள் ஏற்பட்டு மாணவ, மாணவிகள் காயம் அடைகின்றனர். ஒரு சில நேரங்களில் உயிரிழப்புகளும் ஏற்படும் அபாயம் உள்ளது. எனவே மேல்நல்லாத்தூர் ஊராட்சி மன்றம் அலுவலகம் எதிரில் விபத்துகளை தவிர்க்க ஏதுவாக வேகத்தடையை அமைத்திட வேண்டும் என அப்பகுதி மக்கள் மாவட்ட நிர்வாகத்திற்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.
The post திருவள்ளூர் – ஸ்ரீபெரும்புதூர் நெடுஞ்சாலையில் மேல்நல்லாத்தூர் ஊராட்சி மன்ற அலுவலகம் எதிரில் வேகத்தடை : பொதுமக்கள் கோரிக்கை appeared first on Dinakaran.