வெளிமாநில தொழிலாளர்கள் விவரங்களை வலைத்தளத்தில் பதிவு செய்ய அறிவுறுத்தல்

 

ஈரோடு, நவ. 20: பல்வேறு நிறுவனங்களில் பணிபுரியும் வெளி மாநில தொழிலாளர்களின் விவரங்களை தொழிலாளர் நலத்துறையின் வலைத்தளத்தில் பதிவு செய்திடுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதுகுறித்து, ஈரோடு தொழிலாளர் உதவி ஆணையர் (அமலாக்கம்) கோ.ஜெயலட்சுமி வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது: ஈரோடு மாவட்டத்தில் அனைத்து வணிகர்களும் தங்களது நிறுவனங்களில் பயன்படுத்தும் எடை அளவுகளை உரிய மறு முத்திரை சான்றுடன் பயன்படுத்த வேண்டும்.

தரமற்ற முத்திரை இடப்படாத எடை அளவுகளை வியாபாரத்துக்கு உபயோகிப்பதை தவிர்த்திட வேண்டும். 10க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பணி புரியும் கடைகள், நிறுவனங்கள் தங்களது விவரங்களை உடனடியாக வலைத்தளத்தில் பதிவு செய்து, சான்று பெற விண்ணப்பிக்குமாறு தெரிவித்துக்கொள்ளப்படுகிறது.

மேலும், கடைகள் மற்றும் நிறுவனங்கள், உணவு நிறுவனங்கள், மோட்டார் போக்குவரத்து நிறுவனங்கள், பீடி, சுருட்டு தயாரிப்பு நிறுவனங்கள் மற்றும் இதர நிறுவனங்களில் பணியாற்றும் வெளிமாநில தொழிலாளர்களின் விவரங்களை தொழிலாளர் துறையின் https://labour.tn.gov.in/ என்ற வலைத்தளத்தில் பதிவு செய்திடுமாறு நிறுவனங்களின் உரிமையாளர்கள் கேட்டுக் கொள்ளப்படுகின்றனர்.
இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

The post வெளிமாநில தொழிலாளர்கள் விவரங்களை வலைத்தளத்தில் பதிவு செய்ய அறிவுறுத்தல் appeared first on Dinakaran.

Related Stories: