ஈரோடு, நவ.19: ஈரோடு அடுத்த சித்தோடு குமிளம்பரப்பு சாலை விகேஎல் நகரை சேர்ந்த மக்கள் ஈரோடு கலெக்டர் அலுவலகத்தில் நேற்று அளித்த மனுவில் கூறியிருப்பதாவது: ஈரோடு மாநகராட்சி 4வது வார்டில் உள்ள வி.கே.எல். நகர் பகுதியில் 200க்கும் மேற்பட்டோர் வசிக்கிறோம். எங்கள் பகுதி முழுமையாக ஈரோடு மாநகராட்சியில் அங்கீகரிக்கப்பட்டுள்ளது. ஆனாலும், அடிப்படை வசதிகளான சாலை, சாக்கடை, குடிநீர், தெரு விளக்கு, கழிப்பிடம் போன்ற எந்த வசதிகளும் செய்து கொடுக்கப்படவில்லை.
தெருவிளக்குகள் இல்லாததால் இரவில் பாதுகாப்பு இல்லாத நிலையும், கொசுத்தொல்லையுடன், விஷ ஜந்துகளின் நடமாட்டமும் அதிகம் உள்ளது. எங்கள் பகுதிக்கு அடிப்படை வசதிகளை செய்து கொடுக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. வருங்கால சவால் தற்போது டார்க் வெப் போன்று பல வெப்சைட்டுகள் உலகம் முழுவதும் தொடங்கி, தங்களது சமூக விரோத செயல்களை அரங்கேற்றி வருகின்றன.
வருங்காலத்தில் இவர்களை கண்டறிவது மிகப்பெரிய சவாலாக இருக்கும். குறிப்பாக கடந்த 10 வருடத்திற்கு முன்பு வரை காவல் நிலையங்களில் சைபர் கிரைம் என்ற ஒரு பிரிவு பெரிய அளவில் செயல்படவில்லை. ஆனால் இன்று சட்டம் ஒழுங்கு மற்றும் குற்றப்பிரிவுக்கு இணையாக இந்த சைபர் கிரைம் செயல்பட்டு வருகிறது.
தினமும் அவ்வளவு வழக்குகள் பதிவு செய்யப்பட்டு வருகின்றன. இதேபோன்று வருங்காலத்தில் போதை பொருட்களுக்கு எதிராக தற்போது தொடங்கப்பட்டுள்ள போதை பொருள் தடுப்பு நுண்ணறிவு பிரிவு விரிவுபடுத்தப்பட்டு தமிழக முழுவதும் அவர்களின் செயல்பாடுகள் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
The post அடிப்படை வசதிகள் செய்து தர கோரி மனு appeared first on Dinakaran.