அந்தியூர்,நவ.21: இராமநாதபுரம் மாவட்டம் கடலாடி திட்டன்குளம் தெற்கு வீதியைச் சேர்ந்தவர் பாலமுருகன்(36). இவர் அந்தியூரில் இருந்து வெள்ளித்திருப்பூர் செல்லும் ரோட்டில் பெரிய ஏரி கரைப்பகுதியில் பாலம் கட்டும் பணி நடந்துவரும் தனியார் கட்டுமான நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறார்.
இவர் நேற்று காலை 7 மணி அளவில் பாலம் வேலை நடைபெறும் இடத்திற்கு சென்ற போது, ஒருவர் மொபட்டில் 4 இரும்பு ஷட்டர் மற்றும் 2 இரும்பு பைப்புகளை கட்டிக்கொண்டு புறப்பட்டார். அவரைப் பிடித்து அந்தியூர் போலீசில் பாலமுருகன் ஒப்படைத்தார். விசாரணையில் பாலம் வேலை நடைபெறும் இடத்திலிருந்து இரும்பு தளவாடங்களை திருடியது தர்மபுரி மாவட்டம் பாலக்காடு அம்மன் கோயில் வீதியைச் சேர்ந்த தர்(28) என்பது தெரிய வந்தது. இதனையடுத்து ஸ்ரீதரை போலீசார் கைது செய்தனர்.
The post பாலம் கட்டும் பணியின் போது இரும்பு தளவாடங்கள் திருடியவர் கைது appeared first on Dinakaran.